Home சினிமா விமர்சனம் கோலிவுட் தெய்வமகள் நாயகிக்கு அடித்த ஜாக்பாட் ! வெள்ளித்திரையில் குவியும் பட வாய்ப்புகள் …

தெய்வமகள் நாயகிக்கு அடித்த ஜாக்பாட் ! வெள்ளித்திரையில் குவியும் பட வாய்ப்புகள் …

413
0
vani
Share

சன் தொலைக்காட்சியில் எப்போதுமே ஏதாவது ஒரு தொடர் அனைத்து இல்லங்களிலும் வெகுவாக பேசப்படும். அது போல தெய்வமகள் என்ற சின்னத்திரை தொடர் பயங்கர ஹிட் அடித்தது.
அதில் வாணி போஜன் சத்யா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த சத்யா கதாபாத்திரம் அனைத்து இல்லங்களிலும் வெகுவாகப் பேசப்பட்டது. இவர் ஊட்டியை சேர்ந்தவர். இதுவே இவரது முதல் சின்னத்திரை தொடராகவும் இருந்தது. இந்த ஒரே தொடரில் இவர் நடித்த கதாபாத்திரம் நன்கு பேசப்பட்டது.
அதன் பிறகு வேறு எந்த தொடரிலும் இவர் நடிக்கவில்லை. அதையடுத்து ஒரு சில டிவி சேனல்களில் சிறு சிறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்பு வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்புகள் வந்தன.
ஓ மை கடவுளே என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது விக்ரம் பிரபு நடிப்புவிற்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை ஒரு தெலுங்கு இயக்குநர் இயக்குகிறார்.
அதே போல் வைபவ் கதாநாயகனாகவும் வாணிபோஜன் கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் இந்த படத்தை நிதின் சத்யா குழுமம் தயாரிக்கின்றனர்.
மேலும் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார் இந்த படத்தை புது முக இயக்குநர் இயக்குகிறார்.
இது போல் ஏராளமான வாய்ப்புகள் அவருக்குக் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கோலிவுட் கதாநாயகிகளுக்கு ஒரு போட்டியாக அமைவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here