Home செய்திகள் இந்தியா பாகுபலிக்கு வில்லனாகும் அரவிந்த்சாமி…

பாகுபலிக்கு வில்லனாகும் அரவிந்த்சாமி…

1019
0
Share

பிரபாஸ் நடிக்கும் 21வது படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவுள்ளார்.
பாகுபலி படத்தில் நடித்த பிறகு நடிகர் பிரபாஸ் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் இந்தியில் ஹிட் அடிக்கிறது. எனவே ஹிந்தி ரசிகர்களைக் கவரப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்கள் எடுக்கப்படுகிறது.
இதற்கு முன்பு வெளியான சாஹா படத்தைக் கூட பாலிவுட் வியாபாரத்தைக் கருத்தில் கொண்டு பிரபாஸ் ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்தார்.
இதனை அடுத்து பிரபாஸ் தனது 20வது படத்தை இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் பூஜை ஏற்கனவே முடிந்து அதன் படங்கள் நேற்று வெளியாகின.
அந்த படத்தை முடித்த பிறகு பிரபாஸ் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கிறார். இது பிரபாஸின் 21வது படமாகும்.
தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்பான படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார். அதனை முடித்த பிறகு பிரபாஸ் நடிக்கும் 21வது படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியை அணுகியுள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here