Home செய்திகள் இந்தியா கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுப்பேன்.. மோடி ஆவேச பேச்சு !

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுப்பேன்.. மோடி ஆவேச பேச்சு !

421
0
Modi In Corona Awareness
Share

CII ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில், முக்கியமாக அவர் கூறியிருப்பது  வேகமான வளர்ச்சிக்கான பாதையில் இந்தியாவை மீண்டும் கொண்டு வர, ஐந்து விஷயங்கள் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. அவை நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு, புதுமை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய முக்கிய தேவை என்பது இந்தியத் தயாரிப்புகள் மட்டுமே. இந்தியாவில் தயாரிக்கப்படுபவை  அனைத்தும் உலகம் முழுதும் சென்றடைய வேண்டும். அதே சமயம் நாம் இறக்குமதியைக் குறைப்பதில் அதிக  கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
modi
அவரது பேச்சில் உள்ள முக்கியமானவை :
1.கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பால் தான் இது போன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் நடத்த புது  முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
2.கொரோனா வைரசிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
3.விவசாயம், சுயதொழில் செய்வோர், தொழில் முனைவோர், தொழில்நுட்பம் போன்றவை மூலம்  நம் நாட்டின் பொருளாதாரம் விரைவில் மீண்டெழும்.
4.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தாண்டி பொருளாதாரம் தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா சென்று கொண்டுள்ளது.
5.விவசாயப் பொருட்களை மின்னணு வர்த்தகம் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.
6.ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிக்கரமாக இருக்கின்றன.
7.இந்தியா சுயச்சார்பு நாடாக வளர்ச்சி பெறத் தேவையான நடவடிக்கையை எடுக்கத் தொழிலதிபர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்.
வேகமான வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை மீண்டும்  கொண்டு செல்தற்கு, ஐந்து விஷயங்கள் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது : நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு, புதுமை.
லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான  இயந்திரமாகும். ஆகவே இந்தியப் பொருளாதாரத்திற்கு இந்த சிறு, குறு நிறுவனங்கள் தான் முக்கியமாகக்  கருதப்படுகிறது.
வளர்ச்சியைத் திரும்பப் பெறுவது என்பது அவ்வளவு கடினமானது அல்ல. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அனைவரும் – தொழில்துறை அலகுகள் – ஒரு தெளிவான பாதையை வைத்துள்ளீர்கள்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here