Home முகப்பு உலக செய்திகள் மூக்கு வழியாக ஸ்பேரே செய்யும் விதமான கொரோனா தடுப்பூசி!.. சீன ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!…

மூக்கு வழியாக ஸ்பேரே செய்யும் விதமான கொரோனா தடுப்பூசி!.. சீன ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!…

436
0
Corona vaccine sprayed through the nose
Share

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியை சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையே ஆட்டிப்படைத்து வருகிறது. மனிதர்களிடையே தொடுதல் மூலமாக பரவும் இந்தக் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொருளாதார ரீதியில் அனைத்து நாடுகளும் பெரும் சரிவை சந்தித்தன.

இந்த நோய் தொற்று பரவத் தொடங்கி 6 மாதங்களுக்கு மேலாகியும், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் முன்னணி நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

வரிசையாக மைச்சர்களுக்கு கொரோனா ! தலைமைச் செயலகம் மூடல்..

இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, முதன் முதலாக மூக்கு வழியாக ஸ்பிரே செய்யக்கூடிய தடுப்பூசியை ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைகழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவை இணைந்து கூட்டாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்பு கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல் மருத்துவ சோதனை தொடங்கும் என்றும், முதற்கட்டமாக 100 பேருக்கு செலுத்தி ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here