Home செய்திகள் இந்தியா சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 20 சதவீத கட்டண சலுகை….

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 20 சதவீத கட்டண சலுகை….

469
0
Metro
Share

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் மின்னணு முறையில் மெட்ரோ ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தியுள்ள CMRL செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் “QR CODE ” எனும் வசதியை பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்பவர்களை கொரோனா பரவலிலிருந்து பாதுகாக்கவும், பயணிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த சலுகை வழங்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2020 சென்னை அணிகள் ஆட்ட அட்டவணை ! முழு விவரம்…

இந்த சலுகை ஒரு வழி மற்றும் இருவழி போன்ற இரண்டிற்கும் பொருந்தும் என்றும் ஆனால் CMRL செயலியை கொண்டு மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 11 முதல் அமலுக்கு வந்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here