Home செய்திகள் இந்தியா வரிசையாக அமைச்சர்களுக்கு கொரோனா ! தலைமைச் செயலகம் மூடல்..

வரிசையாக அமைச்சர்களுக்கு கொரோனா ! தலைமைச் செயலகம் மூடல்..

350
0
EPS
Share

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கொரோனா பாதிப்பு  படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதில் தமிழக முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் வரிசையாகத் தமிழக அமைச்சர்களும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆம் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் ஏற்கனவே பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கொரோனா தொற்று தடுப்பு பணியிலிருந்ததாகவும் அது மட்டுமின்றி சில தினங்களுக்கு முன் அமைச்சர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தெரியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இப்படி இருக்கத் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று வரிசையாக உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தலைமைச் செயலகம் 2 நாட்கள் மூடப்பட்டு முழுவதும் கிருமி நாசினி தெளித்துச் சுத்தப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here