Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் கல்லூரித் தேர்வுகள் ரத்தா ? அமைச்சர் கே.பி. அன்பழகன் பரபரப்பு பேட்டி

கல்லூரித் தேர்வுகள் ரத்தா ? அமைச்சர் கே.பி. அன்பழகன் பரபரப்பு பேட்டி

464
0
K.p.anbzhagan
Share

கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், என அனைத்து கல்வி தேர்வுகளும், போட்டித் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு இருந்தன. இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தனர்.

அதே போல் தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு நீண்ட ஆலோசனைக்கு பிறகு ரத்து செய்யப்பட்டது. இதற்கு பிறகு பல்வேறு தரப்பினர் வெவ்வேறு மீம்ஸ்களை உருவாக்கி கல்லூரி தேர்வு ரத்து செய்யுமாறு வலியுறுத்தினர்.

தற்போது கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பது தொடர்பாக அமைச்சர் கே.பி. அன்பழகன் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் :

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களையும், அறிகுறி சந்தேகத்தில் இருப்பவர்களையும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஒரு சில தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். இதற்கு பல்வேறு தனியார் கல்லூரிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

எனவே தற்போது தேர்வு நடத்துவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை ஏனென்றால் இந்த கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே கல்லூரிகளும் பள்ளிகளும் காலியாகும். எனவே தேர்வு நடத்த போதுமான அளவு இடம் தற்போது இல்லை. அதே நேரம் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பிரச்சனை தீர்ந்த பிறகே தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். தேர்வு ரத்தாகுமா என்று ஏராளமானோர் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறந்த கல்வி நிறுவனத்திற்கான தரவரிசையில்  சென்னை IIT முதலிடம் !

தேர்வு ரத்து செய்வதில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஒவ்வொரு மாணவரின் கல்வி தரத்தையும் மதிப்பிடுவது தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே. இந்த கல்லூரி மதிப்பெண்கள் தான் அவர்கள் எதிர்காலத்திலும் அவர்களுக்கு உதவக்கூடியது. எனவே ரத்து செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்த பின்பே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் பொறியியல் மாணவர்கள், கலைக்கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என குறைந்தபட்சம் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியே வர நேரிடும். இத்தகைய சூழலில் பேராபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது கல்வித்துறையை கருதுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here