Home செய்திகள் இந்தியா கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்க நிறுவனத்துடன் இணைத்துள்ளது….

கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்க நிறுவனத்துடன் இணைத்துள்ளது….

430
0
covid 19
Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேராபத்தை விளைவித்துக் கொண்டுள்ளது. இந்த வைரஸ் தாகத்திற்கு உலகளவில் கிட்டத்தட்ட 80 லட்சம்  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அமெரிக்கா இந்த கொரோனா வைரஸ்  பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் திக்குமுக்காடி வருகிறது. அதே போல் இந்தியாவில் இந்த கொரோனா வைரசின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் இந்த வைரசிற்கு இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை. உலகம் முழுதும் கடந்த 6 மாதங்களாக இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த நோய்க்கு இன்னும் இது தான் மருந்து என்று கண்டுபிடிக்கவில்லை. தற்போதைக்கு ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
panaceaமேலும் சில மருந்துகள் சோதனையில் உள்ளன. இத்தகைய சூழலில் அமெரிக்காவின் ரெபானா (Refana) நிறுவனத்துடன் டில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பனசியா பயோடெக் (Panacea Biotec) என்ற நிறுவனம் கைகோர்த்துள்ளது.
இந்தியாவின் பனசியா நிறுவனம் மருந்தை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது. மேலும் அமெரிக்காவில் விற்பனை தொடர்பான அனைத்து பணிகளையும் ரெபானா பார்த்துக்கொள்ளும் என்று  தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக பனசியா நிறுவனத்தின் CEO ராஜேஷ் ஜெயின் கூறியிருப்பதாவது, உலகம் முழுவதும் ஒரு நம்பிக்கையான மருந்தை எதிர்நோக்கியுள்ளது. ரெபானா உடன் தற்போது இணைத்துள்ளதால், 500 மில்லியன் மருந்துகளைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, என்றார். மேலும் பனசியா நிறுவனம், ஏற்கனவே டெங்கு போன்ற பல்வேறு நோய்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here