Home செய்திகள் இந்தியா சிறந்த கல்வி நிறுவனத்திற்கான தரவரிசையில்  சென்னை IIT முதலிடம் !

சிறந்த கல்வி நிறுவனத்திற்கான தரவரிசையில்  சென்னை IIT முதலிடம் !

349
0
IIT
Share

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை IIT மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது இரண்டாவது முறையாகும்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து மத்திய மேம்பாட்டு அமைச்சகம் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் 2020-இல் தலைசிறந்த கல்லூரிகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம்  அனைத்து கல்லூரிகளின் தரம் நிர்ணயிக்கப்படும். டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலைக் கொண்ட பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் சென்னை IIT முதலிடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலைத் தேசிய தரவரிசைப் பட்டியல் நிறுவனமான NIRS அனைத்து பொறியியல் கல்லூரிகளின் தரத்தை மதிப்பீடு செய்து ஆராய்ந்து, இந்த பட்டியலை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த டாப் 10 லிஸ்ட்யை வெளியீடு செய்யும்.
தற்போது மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இதனை வெளியிட்டுப் பேசியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்தப் பட்டியலில் வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 45 ஆயிரம் கல்லூரிகளுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த தரவரிசை பட்டியல் ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் தரம், கற்றல் திறன், மாணவர்களின் நோக்கம், திறன், ஆராய்ச்சி, கல்வி முடித்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை, என 9 பிரிவுகளாக ஆய்வுகள்  செய்து 100 -க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்ற கணக்கின் கீழ் தரவரிசை செய்யப்படும்.
டாப் 10 இடங்களில் இந்தியாவில் உள்ள 9 IIT கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
1. IIT சென்னை.
2. IIT டெல்லி.
3. IIT மும்பை.
4. IIT கான்பூர்.
5. IIT காரக்பூர்.
6. IIT ரூர்கி.
7. IIT கவுகாத்தி.
8. IIT ஹைதராபாத்.
9. தேசிய  தொழில்நுட்ப கல்வி நிறுவனம் திருச்சி.
10. IIT  இந்தூர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here