Home செய்திகள் இந்தியா உலகை உறைய வைத்த கொரோனா!

உலகை உறைய வைத்த கொரோனா!

913
0
Corona Virus
Share

தற்சமயம் உலகை அச்சுறுத்தி வரும கொரோன வைரஸ் எனப்படும் நோய்க்கிருமி சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து பரவிய ஒரு வகை தொற்று நோய்க் கிருமியாகும். உயிரைக் குடிக்கக் கூடிய இந்த வைரஸ் தாக்கி இதுவரை 80கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குடும்பம்பம்

கொரோனா வைரஸ் (கோவிட் – 19) என்பது மனிதர்களின் மூக்கு, சைனஸ்கள் அல்லது தொண்டையில் தொற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு வகையான பொதுவான வைரஸ் ஆகும். பெரும்பாலான கொரோனா வைரஸ்கள் ஆபத்தானவை அல்ல.

ஆனால் அவற்றில் சில வகைகள் மிகவும் தீவிரமானவை. Middle East respiratory syndrome (MERS) எனப்படும் வைரஸ் நோயால் சுமார் 858 பேர் இறந்துள்ளனர்இது முதலில் 2012 இல் சவுதி அரேபியாவிலும் பின்னர் மத்தியகிழக்கு, ஆப்பிரிக்காஆசியா மற்றும் ஐரோப்பாவின் பிற  நாடுகளிலும் பரவியதுஏப்ரல் 2014 இல்முதல் அமெரிக்கர் இந்தியனா மாகாணத்தில் MERS க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்பிளோரிடாவை சேர்ந்த மற்றவரும் இந்த நோய் தோற்று ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார், இருவருமே சவுதி அரேபியாவிலிருந்து வந்தவர்கள்மே 2015 இல்கொரியாவில் MERS வைரஸ் தாக்குதல் ஆரம்பித்ததுஇது அரேபியத் தீபகற்பத்திற்கு வெளியே மிகப்பெரிய பாதிப்பாகும். 2003 ஆம் ஆண்டில், severe acute respiratory syndrome (SARS) என்ற வைரஸ் தாக்குதல் நோய் பரவியதால் 774 பேர் இறந்தனர். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, SARS வைரஸ் பாதிப்புகள் இல்லாமல் இருந்தது. MERS மற்றும் SARS ஆகியவை கொரோனா வைரஸ்களின் வகைகளாகும்.

முதன் முதலில் கண்டறியப்பட்ட இடம்

Corona virus China

தற்போது பரவி வரும் கொரோன வைரஸ் நோயானது முதன் முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அந்த மாகாணத்திலிருந்து சீனாவின் மற்ற பகுதிகளுக்கும் சீனாவிலிருந்து மாற்ற நாடுகளுக்கும் பரவியதுஇதற்கு முக்கிய காரணம் காற்றில் பரவக்கூடிய இதன் தன்மையை ஆகும்.மேலும் இந்த நோயானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை வரவைக்கக் கூடிய வல்லமை பெற்றதுஇந்த நோய் தொரு ஏற்பட்டு 14 நாட்கள் ஆன பின்பே இந்த நோயின் அறிகுறி தென்படும் என்பதால் இதனைக் கண்டறிவது மிகவும் சிரமம்.தற்போது வரியா சீனாவில் 80 கும் மேற்பட்டோர்  பலியானதாகவும், 2000கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

கொரோனாவின் கோரப்பசி! ஒரே வாரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி

முதலில் பரவிய விதம்

இந்த நோயானது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் கருதுகின்றன. மேலும் இந்த வைரசின் DNA வானது SARS வைரசின்  DNAவுடன் ஒத்துப்போவதால் இதுவும்  SARS  வைரசைப் போன்றே வௌவால்களிலிருந்து பரவிருக்கலாம் என்றும், அல்லது வௌவால்களை உண்ட பாம்புகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.எனவே இறைச்சி உண்பதற்கும் விற்பனை செய்வதற்கும் சீன அரசு தடை விதித்துள்ளது. மேலும் சீனா அரசாங்கம் கொரோனா வைரஸ் நோய் தாக்கியவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகவே ஒரு தற்காலிக மருத்துவமனையை 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிவருகிறது.

 

மற்ற நாடுகளில் உஷார் நிலை

இந்த நோயின் தாக்கத்தை உணர்ந்த மற்ற நாடுகளும் சீனாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வருபவர்களைத் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கம் தைவான், மெஸோக்கோ மற்றும் ஹாங்காங் போன்ற பகுதிகளிலும் கண்டியரியப்பட்டுள்ளதால்இந்தியாவிலும் அனைத்து விமான நிலையங்களிலும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகின்றன.

மேலும் கொரோனா செய்திகள் :

கரோனா வைரஸ் உயிரி ஆயுதமா?

தடுக்க முடியுமா! முடியாதா! சித்த முறையில் கொரோனாவுக்கு தீர்வு

வெளியானது லிஸ்ட் கொரோனாவின் தாக்குதல் ஆபத்தில் 30 நாடுகள்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here