Home செய்திகள் இந்தியா வெளியானது லிஸ்ட் கொரோனாவின் தாக்குதல் ஆபத்தில் 30 நாடுகள்

வெளியானது லிஸ்ட் கொரோனாவின் தாக்குதல் ஆபத்தில் 30 நாடுகள்

1001
0
Corona In All Country
Share

அதீத பயங்கரமான கொரோனா வைரஸ் (கோவிட் – 19) சீனாவில் மட்டும் இதுவரை 132 பேர் இறந்துள்ளனர் இதனால் உலகம் முழுக்க பீதி நிலவுகிறது. சீனாவின் இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவைத் தவிர, உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த கொடிய வைரசின் அதிக ஆபத்து உள்ள 30 நாடுகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

india tour corona

ஜப்பான்,தாய்லாந்து,ஹாங்காங் 

தாய்லாந்து, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகியவை வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் அல்லது நகரங்களில் முதலிடத்தில் உள்ளன. இந்த ஆய்வு அமெரிக்காவுக்கு ஆறாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவுக்கு 10வது இடத்தையும், இங்கிலாந்துக்கு 17வது இடத்தையும் கொடுத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 23வது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு  கண்டறியப்படவில்லை என்றாலும், ஆய்வாளர்கள் இவ்வாறு கணித்துள்ளனர். தாய்லாந்து தலைநகர், பாங்காக மிகவும் அச்சுறுத்தலான நகரங்களில் ஒன்றாகும்.

தடுக்க முடியுமா! முடியாதா! சித்த முறையில் கொரோனாவுக்கு தீர்வு,

முக்கிய 30 நகரங்களின் தரவரிசை:

30 முக்கிய சர்வதேச நகரங்களில் ஹாங்காங் இரண்டாவது இடத்தில் உள்ளது, சிட்னி 12, நியூயார்க் 16, தைப்பே (தைவான்), லண்டன் 19வது இடங்களைப் பிடித்துள்ளது. கொரோனா வைரசின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும், அவற்றின் தொற்றுநோயைப் பற்றிய நுண்ணிய பகுப்பாய்வை வழங்க நாங்கள் கணம் கணம் வைரஸ் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஷெங்ஜி லாய்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Research in coronaஅதீ பயங்கரமான கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது சீன அரசாங்கம். 6000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 28-01-2020 நிலவரப்படி, கொரோனோ வைரஸ் காரணமாக 5,974 நிமோனியா நோயாளிகள் 31 நாடுகளில் அளவிலான பகுதிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சீன சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here