Home ஆன்மீகம் குடும்பத்தில் ஒற்றுமை பெருக எளிய பரிகாரமும் வழிபாடும் …

குடும்பத்தில் ஒற்றுமை பெருக எளிய பரிகாரமும் வழிபாடும் …

608
0
Share

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஜாதகத்தில் இரண்டாம் இடம் மற்றும் ஏழாம் இடம் மிக முக்கிய இடமாக விளங்குகிறது. அதே போல் அஷ்டம ஸ்தானத்தை சப்தமாதிபதியாக விளங்கும் பாவ கிரகங்களோடு இணைந்திருந்தால் இல்லத்தில் ஒற்றுமையில் பிரச்சனை ஏற்படும். இதற்காக சில எளிய வழிபாட்டு முறை மூலம் தீர்வு காணலாம்…

பொதுவாகவே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பர் கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் எனச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் இரண்டாம் மற்றும் ஏழாம் வீட்டில் அதாவது களத்திர ஸ்தானாதிபதி பகை வீட்டில் இருந்தாலும், நீச்சம் பெற்று சூரியனோடு குடிகொண்டிருந்தாலும் பாவ கிரகங்களோடு சம்பந்தப்பட்ட இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை பாதிப்படையும்.

கணவன் மனைவி இடையே உள்ள ஜாதகத்தில் இரண்டாம் இடம் 7ஆம் இடம் பலமிழந்து இருந்தால் அஷ்டம ஸ்தானத்தின் சப்தமாதிபதி பாவ கிரகங்களோடு தொடர்புகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிப்படையும் எக்கணமும் சண்டை சச்சரவு இதற்கு ஒரு சில எளிய வழிபாட்டு முறை உள்ளது.

அவ்வாறு வழிபாடு செய்வதால் இந்த மாதிரியான பிரச்சினைகள் விலகும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஒற்றுமை பெருகும் 7 மற்றும் 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்கும் கடவுள்களை உங்கள் கிரகங்களின் நிலையைப் பொறுத்து வழிபாட்டின் மூலம் தீர்வு காணலாம். மேலும் அதற்கான ஆலய வழிபாடு செய்வதாலும் ஒற்றுமை பெருகும். காமாட்சி அம்மன் படத்தை வீடுகளில் பூஜை அறையில் வைத்துப் பூஜிப்பது, காமாட்சி அம்மன் மந்திரங்களைப் பாடி வழிபடுவதாலும் தங்கள் கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here