Home செய்திகள் இந்தியா விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு.. கூகுளின் புதிய படைப்பு…

விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு.. கூகுளின் புதிய படைப்பு…

469
0
Share

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் விசிட்டிங் கார்டை பயன்படுத்தும் முறையை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பிரபலமானவர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் மட்டுமே விஸிட்டிங்க்கார்ட் முறையைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்றைய வாழ்க்கையில் சிறு வியாபாரிகள் கூட விசிட்டிங் கார்டை பயன்படுத்துகின்றனர். இது போன்ற விசிட்டிங் கார்டை கூகுள் தற்போது விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு என்ற முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு peoples cards என்று பெயரிட்டுள்ளது. இந்த சேவையினை மொபைல் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இசேவை போன்றே இ விசிட்டிங் கார்டு என்றும் இதனை அழைக்கலாம். மொபைல்போன் வாயிலாக தங்களுடைய விசிட்டிங் கார்டை மற்றொருவருக்கு மிக எளிதில் பரிமாறிக் கொள்ளலாம்.

ஆனால் இந்த சேவை தற்போது இந்தியாவிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பயனர்கள் தங்களுடைய முழு விபரத்தையும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து. இச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக தங்கள் விவரங்களை அனுப்புவதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா, தகவல் மூலமாக பாதிப்பு ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சம் தேவையில்லை எதற்காக விசிடே பின்னூட்டல் வசதி ஒன்றும் தரப்பட்டுள்ளது. அதன் மூலம் ஊடகத் தகவல்கள் கசிவு குறித்த புகார்கள் அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு பாதுகாப்பானது என்று கூகுள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here