Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் 5ம் கட்ட ஊரடங்கா ? மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்…

5ம் கட்ட ஊரடங்கா ? மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்…

491
0
EPS
Share

கொரோனா பரவலால் நாடு முழுவதும் நாளை மறுதினம் வரை (31ம் தேதி) 4ம் கட்ட ஊரடங்கு அமலிலுள்ளது. தற்போது மீண்டும் மே 31ம் தேதிக்குப் பிறகு  5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா இல்லையேல் அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பதெல்லாம் குறித்து தமிழக முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
epsஇதனையடுத்து  செய்தியாளர்கள்  சந்திப்பில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி; வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில்  தொடர்ந்து தங்கி பணிபுரிய விரும்பினால் ஆட்சியர்கள் முழு உதவி செய்ய வேண்டும். தளர்வுகளில் இயங்கும் தொழிற்சாலைகள், அரசு வழிகாட்டுதல் படி நடைபெறுகிறதா என ஆட்சியர்கள் கட்டாயம் கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முறையாக ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும். சென்னையைத் தவிரப் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் கிட்டத்தட்டக்  கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களைத் தீவிரமாகத் தனிமைப்படுத்திக்  கண்காணிக்க வேண்டும்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும். கொரோனா வைரஸ்   இருந்து தப்பிக்கப் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.
சென்னை மாநகரத்திற்குள் வரும் அனைவரையும் முழு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். எந்த ஒரு தளர்வுகளும் அறிவிக்கும் முன் ஆட்சியர்கள் தலைமைச் செயலரிடம் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த போரில் இதுவரை ஒருங்கிணைத்துச் செயல்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி கூறி  பாராட்டு தெரிவித்துள்ளார். முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்களுக்குப் பாராட்டு கூறினார்.
கொரோனா பரவலைத் தடுக்க அரசு அனைத்து  நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நேரடியாகப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here