Home வேலைவாய்ப்புகள் கல்வி தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன்?.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!…

தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன்?.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!…

418
0
EPS
Share

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் இயங்காத நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்குமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் மறுதேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதி ஆண்டு பாடங்களின் மறுதேர்வை தவிர மற்ற செமஸ்டர் பாடங்களில் மறுதேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ! பிரதமருக்கு முதல்வர் கடிதம்..

காலம்காலமாக அரியர் எழுதி வரும் பலர் எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டத்தொடங்கியுள்ளனர். அவ்வாறாக ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் “அரியர் மாணவர்களின் அரசனே” என முதல்வரை புகழ்ந்துள்ள அவர்கள் திருக்குறளை முன்னுதாரம் காட்டி அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் மன உளைச்சலுக்குத் தீர்வு காணவே தேர்வு ரத்து செய்யபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here