Home செய்திகள் இந்தியா நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ! பிரதமருக்கு முதல்வர் கடிதம்..

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ! பிரதமருக்கு முதல்வர் கடிதம்..

332
0
modi
Share

நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மாணவர்கள் இத்தேர்வைக் கண்டு மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் JEE தேர்வையும் ஒத்தி வைக்கக் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுச்சேரியில் முதல்வராக உள்ள நாராயணசாமி சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமருக்குக் கடிதம் அனுப்புவதாகக் கூறினார். அந்த கடிதத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவும் JEE தேர்வை ஒத்திவைக்கவும் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது
GST என்ற பெயரில் மாநிலங்கள் வருமானத்தை மத்திய அரசு வைத்துக்கொண்டுள்ளது. இந்த வருமானத்தை மாநிலங்களுக்குச் சரிவர அளிக்க வேண்டுமென்று பிரதமருக்குக் கோரிக்கை வைக்க உள்ளார்.

GST கவுன்சில் கூட்டம் : நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது.

அதே போல் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கொரோனா பரவல் காலத்தில் சமூக இடைவெளியைக் கடைப் பிடிப்பது கடினமாக இருப்பதால் JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏனென்றால் மாநிலங்கள் வாரியாக கல்விக் கொள்கை வெவ்வேறு கோணத்தில் உள்ளது. இதனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் பெரும் மன உளைச்சலைச் சந்திக்கின்றனர். தமிழகத்தில் இது வரை 7 பேர் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்துள்ளனர். இது தொடரக் கூடாது என்பதை வலியுறுத்த உள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here