Home ஆன்மீகம் குங்குமம் பொட்டு இடுவது ஏன் ?

குங்குமம் பொட்டு இடுவது ஏன் ?

1729
0
kungmam
Share

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது வழக்கம். இதற்குப் பின்னால் உள்ள நன்மைகள் இங்கே பார்க்கலாம்.

பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

சுமங்கலிப் பெண்களின் தலை வகுடின் நுனி பகுதியை சீமந்த பிரதேசம் என்பார். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

சீமந்த பிரதேச பகுதி தான் ஸ்ரீமகாலட்சுமி தாயின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

ஆறுமுக தோன்றலின் உண்மை காரணம் …

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலம் கூடும்.

குங்குமம் நல்ல நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

பெண்கள் எப்பொழுதும் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பிறகு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது சிறந்தது.
தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மை கிடைக்கும்.

திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகுடின் தொடக்கத்திலும் குங்குமம் இடுவது சிறப்பு.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தவாறு குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை பெருக்கும்.

கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது தைரியம் கொடுக்கும்.

ஆள்காட்டி விரலால் குங்குமம் இடுவது முன்னனித் தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை மேம்படுத்தும்.
சனிவிரல் எனும் நடுவிரலில் குங்குமம் இடுவது நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

குங்குமம் இடுவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது. மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here