Home ஆன்மீகம் ஆறுமுக தோன்றலின் உண்மை காரணம் …

ஆறுமுக தோன்றலின் உண்மை காரணம் …

1354
0
Lord murugan
Share

தேவர்கள் துன்பத்தில் இருந்த காலத்தில் அவர்களை காக்கும் நோக்கத்தில் சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம்,
சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இதை தவிர ஞானிகளுக்கு மட்டுமே புலப்படும் “அதோமுகம்” (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளியாகின.

அந்த தீப்பொறிகளை வாயு பகவான் பெற்றுச் சென்று வண்ண மீன்கள் துள்ளி ஆடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் பூத்திருந்த தாமரை மலர்களின் மேல் சேர்த்தார்.
அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாக தோன்றியது. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். அப்போது தான் அகில உலக நாயகி பிரமாண்ட தேவி பார்வதி தன் மைந்தர்கள் அணைவரையும் ஒன்றாக அன்புடன் அணைத்திட அறுமைந்தர்களும் ஒரு திருமேனியாக உருவெடுத்து ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களுடனும் ஒரு திருமுருகனாக தோன்றினான். ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றதால் “ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார்.

சித்திரை மாதத்தில் உள்ள சிறப்புகள்.. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது !

இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணாதிசயங்களைக் குறிக்கும். பிரணவ சொரூபமான முருகப்
பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் “ஆறுமுகமே சிவம்,
சிவமே ஆறுமுகம்” எனப் பெறுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here