Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய சத்துக்கள் கொண்ட காய்கறி – தேங்காய்ப்பால் ஸ்ட்யூ…

உடலுக்குத் தேவையான ஆரோக்கிய சத்துக்கள் கொண்ட காய்கறி – தேங்காய்ப்பால் ஸ்ட்யூ…

382
0
Share

நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாக கொரோனா தொற்று மிக எளிதில் பரவும். இதனை எதிர்த்துப் போரிட விட்டமின்கள், தாது சத்துக்கள் ஒரு சேர அளிப்பதிலும், நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை அளிப்பதிலும் முக்கிய உணவாக இருப்பது கேரளாவின் சிறப்புமிக்க காய்கறி ஸ்ட்யூ..

தேவையான பொருட்கள் :-
1 கப் துருவிய தேங்காய்.
1/2 கப் கேரட் துண்டுகள்.
1/2 உருளைக்கிழங்கு துண்டுகள்.
1/4 கப் பீன்ஸ் துண்டுகள்.
1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்.
3 ஏலக்காய்.
2 கிராம்புப் பல்.
சிறிதளவு கறிவேப்பிலை இலைகள்.
இலவங்கப்பட்டை.
உப்பு.

செய்முறை :
தேங்காயை நன்கு அரைத்து வடிகட்டி தேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளவும். பாதி அளவு தேங்காய்ப் பாலில் நறுக்கிய காய்கறிகளையும், மசாலாப் பொருட்களையும் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நன்கு மிருதுவாக வந்த பிறகு மீதி இருக்கும் தேங்காய்ப் பாலையும் அதில் ஊற்றி நன்கு மேலும் வேக வைக்க வேண்டும்.

திருப்பதியில் பொது தரிசனம் ரத்து ! ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் பக்தர்கள்..

அதன் பிறகு 5 நிமிடங்கள் கழித்து மிளகையும், ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு மிக்ஸ் செய்தால் ஹெல்தியான ஸ்ட்யூ ரெடி.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here