Home ஆன்மீகம் திருப்பதியில் பொது தரிசனம் ரத்து ! ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் பக்தர்கள்..

திருப்பதியில் பொது தரிசனம் ரத்து ! ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் பக்தர்கள்..

356
0
Share

திருப்பதியில் கொரோனாவிற்கு பிறகு தளர்வு அளிக்கப்பட்டது. இதனால் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பக்தர்கள் இலவச சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்று அறிவித்திருந்தனர். இதற்கான தரிசன டோக்கன் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நாளுக்கு நாள் நோய் தாக்கம் அதிகரித்து வருவதாலும், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிவர கடைப்பிடிக்காத காரணத்தாலும், வரும் 17ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்க இருப்பதாலும் பக்தர்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இலவச தரிசனம் டோக்கன் ரத்து செய்தது தேவஸ்தான நிர்வாகம். இந்த நடவடிக்கை இந்த மாத இறுதி வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 14இல் பள்ளிகள் திறப்பு ! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்..

திருப்பதியிலிருந்து திருமலைக்கு 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே மலைமீது அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் டிக்கெட் இல்லாமல் யாரும் திருமலைக்கு வரவேண்டாம் தேவஸ்தான நிர்வாக அறிவிப்பை ஏற்று முழு ஒத்துழைப்பு தரும்படி பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தெரியாமல் நேற்று காலை முதல் இன்று வரை ஏராளமான பக்தர்கள் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா ஆகிய இடங்களிலிருந்து இலவச தரிசனத்திற்காகப் பூதேவி காம்ப்ளெக்ஸ் வந்தடைந்தனர்.

Tirupatiஅங்கு இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டதாக ஒட்டப்பட்டிருந்த அறிக்கையைக் கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் ஆத்திரமடைந்து தேவஸ்தான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here