Home கட்டுரை விதவிதமாய் வெப்பநிலைமானி ! கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புது புது திட்டம்..

விதவிதமாய் வெப்பநிலைமானி ! கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புது புது திட்டம்..

360
0
Share

கொரோனா பரவலை அடுத்து கொரோனா அறிகுறியான காய்ச்சல் உள்ளதா என்பதை மனிதர்களுக்குக் கண்டறிய வெப்பநிலைமானி அனைத்து கடைகளிலும், வணிக வளாகங்கள், பொது இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வெப்பநிலைமானி பயன்படுத்தும் போது குறிப்பிட்ட டிகிரி செல்சியசுக்கு மேல் இருந்தால் அவர் கொரோனா அறிகுறி இருப்பவராகக் கருதப்படுகிறார்.

இப்படி இருக்க பல்வேறு இடங்களில் இந்த வெப்ப நிலைமானியை பயன்படுத்துகின்றனர். மும்பையில் ஹெல்மெட்டின் வெப்பநிலைமானி என்று எளிதில் கண்டறியும் வகையில் ஹெல்மெடுடன் வெப்பநிலை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டது. ஏனென்றால் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒரே நேரத்தில் பல பலரது வெப்ப நிலையைக் கண்டறிய இந்த வெப்பநிலைமானி ஹெல்மட் உதவும் என்று கருதுகின்றனர்.

தற்போது தமிழ்நாட்டின் வடவள்ளி உழவர் சந்தைக்கு வந்து செல்பவர்கள் நாள் ஒன்றுக்கு 3000 எண்ணிக்கையைத் தாண்டுகிறது. இங்கு வருபவர்களின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிய வெப்பநிலைமானி பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது புகைப்படத்துடன் மனிதர்களை வெப்பநிலையை சேகரிக்கும் வெப்பநிலைமானி அங்குப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளனர். அது ஒரு நாளைக்கு 3000 பேர் வந்து செல்கின்றனர் அதனால் மாநகராட்சி சார்பில் புகைப்படத்துடன் கூடிய வெப்பநிலைமானி பயன்படுத்துகின்றனர்.

அதாவது ஒரு மொபைல் போன் உடனே வெப்பநிலைமானி இணைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அது சத்தம் எழுப்பும். இதன் மூலம் நாள்தோறும் சந்தைக்கு வந்து செல்பவர்கள் இது புகைப்படமும் சேமிக்கப்படுகிறது. இதனால் எளிதில் எவ்வளவு பேர் வந்து செல்கிறார்கள் என்பதையும் கணக்கிட முடியுமாம் யாராவது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்தால் அவர் எளிதில் கண்டறிய முடியும் என்பதற்காக இந்த புதிய திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here