Home ஆன்மீகம் செவ்வாய் நாதரின் போற்றி மந்திரம்…

செவ்வாய் நாதரின் போற்றி மந்திரம்…

1436
0
Share

நவக்கிரகத்தில் மிக முக்கியமாக இருப்பவர்களில் ஒருவர் செவ்வாய். இந்த செவ்வாயை அங்காரகன் என்றும் அழைப்பர். இவர் முருகனை அதிதேவதையாகக் கொண்டவர்.

பொதுவாகவே செவ்வாய் தோஷம் என்றால் அனைவரும் அஞ்சுவர். அதற்கான பரிகாரங்கள் செய்வது சிறப்பு  வழிபாடுகள் செய்வது என அனைத்து தோஷ பரிகாரங்களும் செய்து முடிப்பர். ஏனென்றால் நம் செயல்களில் எந்த தடங்கல்களும் செவ்வாய் பகவானால் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பயம் தான்.

ஒரு சிலருக்குப் பிறந்த உடனேயே ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாயின் நற்பலன்கள் கிடைக்கும். அவ்வாறு செவ்வாய் உச்சம் அடைந்தாலோ அல்லது நீச்சம் அடைந்தாலோ அவற்றின் போற்றி நாமத்தை உச்சரித்து வணங்க வேண்டும் அவ்வாறு வணங்கினால் பகவானது அருள் கிட்டும்.

ஜாதகம் மட்டுமல்லாமல் செவ்வாய் தினத்தில் பிறந்தாலும், கூட்டு என்னை 9 ஆகக் கொண்டிருந்தாலும் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்களில்  பிறந்திருந்தாலும் செவ்வாய் பகவானின் போற்றி மந்திரத்தைக் கூறி வணங்கினால் நற்பலன் கிடைக்கும். மேலும் எந்த தோஷமும் அண்டாது என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகு காலத்தில்

வீரத்வாஜய வித்மஹே
விக்நஹஸ்தாய தீமஹி
தந்நோ பவும: ப்ரசோதயாத்’

என்ற செவ்வாய் பகவானின் மந்திரத்தை தெற்கு நோக்கி அமர்ந்து 108 முறை சொல்லி, கடுகு எண்ணெய்யால் விளக்கேற்றி, துவரை சுண்டல் செய்து படைத்து வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகி நன்மை உண்டாகும். இந்த மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு என்று நம்புகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here