Home கட்டுரை TN Exam Results: 12ம் வகுப்பில் 93.76%, 10ம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி

TN Exam Results: 12ம் வகுப்பில் 93.76%, 10ம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி

1350
0
Share

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி, 12ம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும், 10ம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வெற்றி,தோல்வி என்கிற மனப்பான்மை மாணவர்களிடம் இருக்ககூடாது. ஜூலை ,ஆகஸ்ட்டில் சிறப்பு தேர்வு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு 1098,14417 என்கிற எண்ணில் ஆலோசனை பெறலாம் எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 12ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர். 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வை 1லட்சத்து 7ஆயிரம் பேர் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:

கன்னியாகுமரி, 97.22%                                    பெரம்பலூர் 97.12%
விருதுநகர் 95.96%

12ம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:

பெரம்பலூர் 97.95%
விருதுநகர் 97.27%
ராம்நாடு: 97.02%

ஜூன் 24ம் தேதி முதல் மாணவர்கள் தற்காலிக சான்றிதழ்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஜூலை 25ம் தேதி 12ம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் தொடங்கவுள்ளது.

The official websites, direct link to check Tamil Nadu Board Class 12 results are-  tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.nic.in, and dge.tn.nic.in.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here