Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யறிலா ?

சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யறிலா ?

1412
0
Airport
Share

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து நீண்ட காலம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதனால் சென்னை அருகில் உள்ள சில இடங்களைத் தேர்ந்தெடுத்து வந்தனர் . அதில் காஞ்சிபுரம் மாவட்டம்  ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று வெகு நாட்களாகக் கூறப்பட்டது. பின்னர்   எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரத்தில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.Airport news
அதையடுத்து விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேடும் பணி விறுவிறுப்பாக நடந்தது.அதில்  சென்னை – பெங்களூர் NH -4 சில இடங்களைத் தேர்வு செய்திருந்தனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேடுவதாக சில முக்கிய அதிகாரிகள் தரப்பினர் கூறியுள்ளனர்.
இதற்குக் காரணமாக இடம் வாங்கச் செலவாகும் மதிப்பைக் கூறுகின்றனர். ஏனென்றால் சென்னைக்கு அருகில் காஞ்சிபுரம் உள்ளது அதே போல் ஏராளமான தொழிற்சாலைகள் இங்கு அமைத்துள்ளன இதனால் விமான நிலையம் அமைக்கத் தேவையான இடத்தின் செலவு அதிகமாகும் எனக் கருதுகின்றனர்.
அதுவே செய்யாறு திருவண்ணாமலை மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைத்துள்ளது. ஆனால் சென்னையிலிருந்து சற்று தொலைவாகத்தான் உள்ளது நேரடியாகச் செல்ல இயலவில்லை என்றாலும் செங்கல்பட்டைத் தாண்டி செல்ல வேண்டியுள்ளது.
இதற்கு நெடுஞ்சாலை கிடையாது. நெடுஞ்சாலையிலிருந்து வெகுதூரத்தில் தான் அமைத்துள்ளது. ஒரு வேளை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேறினால், அந்தத் திட்டத்தில் செய்யாறுக்கு இணைப்பு சாலை அமைய  வாய்ப்புள்ளது.
அதே சமயம் இந்த திட்டம் 8 வழிச் சாலைக்காகவும் இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. செய்யாறில் பசுமை விமான நிலையம் அமைந்தால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களும் சென்னை புறநகராக  விரிவடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here