Home வேலைவாய்ப்புகள் கல்வி தமிழக அரசு அறிவித்த அரியர் தேர்ச்சி முடிவில் எந்த மாற்றமும் இல்லை…

தமிழக அரசு அறிவித்த அரியர் தேர்ச்சி முடிவில் எந்த மாற்றமும் இல்லை…

436
0
K.p.anbzhagan
Share

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பொறியியல் கல்லூரியில் வழங்கப்பட்ட அரியர் மாணவர்களின் தேர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்று தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அரியர் தேர்வு எழுத பணம் செலுத்தி இருந்தால் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக முதல்வர் கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார். இந்த முடிவை ஏற்க அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE ) மறுப்பு தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை ! தமிழக அரசு அறிவிப்பு.

இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் AICTE எந்த மின்னஞ்சலும் இது வரை அனுப்பவில்லை.

அதே போல் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் கருத்தை AICTE -ன் கருத்தாகத் திணிக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்
ஏதாவது மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here