Home டெக்னாலஜிஸ் IOT சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் வயர்லெஸ் சார்ஜர் ! மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய முடியுமாம்…

சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் வயர்லெஸ் சார்ஜர் ! மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய முடியுமாம்…

446
0
Share

ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யும் வகையில் சாம்சங் நிறுவனம் ஒரு வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் எலக்ட்ரானிக் சாதனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்குவது ஒரு சில நிறுவனங்களே. அந்த நிறுவனங்களில் மிக முக்கியமாகக் கருதப்படுவது சாம்சங். இந்த சாம்சங் நிறுவனம் ஏராளமான எலக்ட்ரானிக் சாதனங்களை இன்றைய உலகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் முக்கியமாகக் கருதப்படுவது ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் ஹெட்செட் போன்றவை இவை ஜார்ஜ் செய்வதற்கும் புதுப்புது தொழில்நுட்பத்தை நாளுக்கு நாள் தயாரித்து வருகிறது.

தமிழக அரசு அறிவித்த அரியர் தேர்ச்சி முடிவில் எந்த மாற்றமும் இல்லை..

தற்போது சாம்சங் வயர்லெஸ் சார்ஜரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 சாம்சங் சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டிற்கு முன்பு சாம்சங் டூயோ என்று இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்யும் சார்ஜரை அறிமுகப் படுத்தியது. அதன் அப்டேடாக இந்த சாம்சங் ட்ரியோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விலை 99 யூரோ என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 8000 ரூபாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here