Home செய்திகள் இந்தியா உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை கடும் சரிவு…

உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை கடும் சரிவு…

300
0
Share

வாரத்தின் முதல் நாளான இன்று உயர்வுடன் துவங்கிய பங்குச்சந்தை சிறிது நேரத்தில் கடும் சரிவைச் சந்தித்து மீண்டும் பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 9 மணி அளவில் தொடங்கிய பங்குச் சந்தையின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணில் 520.67 புள்ளிகள் அதிகரித்து 39,987.98ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 141.05 புள்ளிகள் உயர்ந்து 11,788.65ஆகவும் வர்த்தகமாகி 9.15க்கு சில்லரை வர்த்தகத்திற்குத் துவங்கின. துவங்கிய சிறிது நேரத்திலேயே கடும் சரிவைச் சந்தித்தது.

ஸ்பெயின் அண்டலூசியாவில் பயங்கர காட்டுத் தீ !

தொடர் அந்நிய நாட்டு முதலீடு காரணமாக மிகப் பெரிய ஏற்றம் கண்ட ரிலையன்ஸ், எச்டிஎப்சி, ஆக்சிஸ், ஓஎன்ஜிசி, டெக் மகேந்திரா போன்ற பல நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்விலிருந்ததால் கடந்த வாரத்தில் முதலீட்டில் ஈடுபட்டிருந்த வர்த்தகர்கள் தற்போது லாபம் பெற்றதன் காரணமாக விற்றனர். இந்த சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா சீனா எல்லைப்பகுதியில் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினை குறித்து வெளியான செய்தி பங்குச் சந்தைக்குப் பெரிய இடியாக மாறியது இதனால் தான் இவ்வளவு பெரிய வீழ்ச்சி என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இதனால் இன்றைய பங்குச்சந்தை முடிவில் மும்பை பங்குச் சந்தை 839 புள்ளிகள் இழந்து 386828 ஆகவும், நிப்டி 260 புள்ளிகளை இழந்து 11387 என்ற கணக்கில் முடிந்தது.

இந்த ஏற்ற ஏற்ற இறக்கத்தில் இன்று அதிகபட்சமாக மும்பை பங்குச் சந்தை 1000 புள்ளிகள் வரை சரிவாகவும், நிப்டி 350 புள்ளிகள் சரிவு வரையும் வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here