Home செய்திகள் இந்தியா ஸ்பெயின் அண்டலூசியாவில் பயங்கர காட்டுத் தீ !

ஸ்பெயின் அண்டலூசியாவில் பயங்கர காட்டுத் தீ !

359
0
Share

ஸ்பெயின் நாட்டில் உள்ள அண்டலூசியா என்ற பகுதியில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிகிறது. இந்த காட்டுத் தீயினால் இது வரை 2500க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியா எனும் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் சிறிய தீ ஆக இருந்தது. சிறிது வேக வேகமாகப் பரவியதால் இது வரை 90 சதுர கிலோமீட்டர் சுற்றளவு வரை மரங்கள் பற்றி எரிந்தன மேலும் தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் பரவாமல் இருப்பதற்கு ராணுவத்தினர் ஹெலிக்காப்டர் கொண்டு இரசாயனப் பொடிகளைத் தூவி வருகின்றனர். தீ கட்டுக்கடங்காமல் தீப்பிழம்பாக மாறி வானுயர பற்றி எரிகிறது. எனவே இந்த காட்டிற்கு அருகில் உள்ள மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினார்.

மிதக்கும் தியேட்டர் ! சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க புதிய யுக்தி.

இது வரை இந்த காட்டு தீ விபத்தினால் மனித உயிர்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை. இன்னும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினரும், ராணுவத்தினரும் போராடி வருகின்றனர். இது வரை 450க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டுத் தீயை அணைத்த பிறகு உயிர்ச்சேதம் குறித்துக் கணக்கெடுப்பு தெளிவாகக் கிடைக்கும். வனத்திற்கு அருகில் உள்ள மக்களில் 2500 பேரைப் பாதுகாப்பு நலன் கருதி வெளியேற்றிப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here