Home செய்திகள் இந்தியா SWIGGY , ZOMATO டெலிவரி பாய்ஸ் உடலின் வெப்பநிலை ! வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய...

SWIGGY , ZOMATO டெலிவரி பாய்ஸ் உடலின் வெப்பநிலை ! வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய அப்டேட்…

972
0
Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாகக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதால் சில நகரங்களில் ஏராளமானோர் ZOMATO மற்றும் SWIGGY போன்ற உணவு விநியோக APP -களில் உணவுகள் ஆர்டர் செய்கின்றனர்.zomato
கடந்த வாரத்தில்  டெல்லி மால்வியா நகரில் தனியார் டெலிவரி செய்பவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அதனால், அந்த நபரால் டெலிவரி செய்யப்பட்ட 72 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ZOOM APP-யை போலவே பல சிறப்பம்சங்களுடன் Facebook ! அப்படி என்ன வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் உள்ள வசதிகள் ?

இதனால் மக்கள் ZOMATO, SWIGGY போன்ற ஆப்களில் உணவு ஆர்டர் செய்யப் பயப்படத் தொடங்கியுள்ளனர். இந்த பயத்தைப் போக்கவும், ஊழியர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் ZOMATO, அவர்கள் ஊழியர்களின் உடல் வெப்பநிலையை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.
இதனால் உணவு டெலிவரியைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள், ZOMATO ஊழியருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா எனத் தெரியப்படுத்த முடியும். உணவு டெலிவரி செய்பவரின் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட உடல் வெப்பநிலையைக் காண்பிக்க ZOMATO செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்று சீனாவில் உணவு விநியோக நிறுவனம் உணவு டெலிவரி செய்பவரின் உடல் வெப்பநிலையை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தியதை நீங்கள் இணையதளத்தில் கண்டிருக்கலாம்.
இதற்காக உணவகங்களுக்கு, ஆர்டரை எடுக்க வரும் ZOMATO டெலிவரி ஊழியர்கள் அவர்களின் வெப்பநிலையைச் சோதனை செய்வதை ZOMATO கட்டாயமாக்கியுள்ளது. இப்படி டெலிவரி செய்பவர்களின் உடல் வெப்பநிலை தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு, டெலிவரி செய்பவர்களின் தற்போதைய இருப்பிடத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ZOMATO செயலியில் காட்டப்படும்.
மேலும் கைகளைக் கழுவுவது, முகமூடி மற்றும் கையுறைகளை அணிவது போன்ற வழிகாட்டுதல்களும் டெலிவரி செய்பவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளது ZOMATO.
டெலிவரி செய்பவர்களின் உடல் வெப்பநிலை அனுமதிக்கப்பட்ட 98.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலைக்கு அருகிலிருந்தால் மட்டுமே டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது ZOMATO. பல்வேறு  இடங்களுக்குச் சென்று அதிகளவில் உணவு டெலிவரி செய்யும் 50 % ஊழியர்களின் உடல் வெப்பநிலையை மட்டுமே தற்போது  வரை ZOMATO செயலியில் வாடிக்கையாளர்களுக்குக் காட்ட முடியும். இந்த வசதியைத் தினசரி அடிப்படையில் புதியதாக உணவு டெலிவரி செய்பவர்களும் விரைவில் இணைக்கப்படுவார்கள்.
அத்தியாவசிய உணவுகளை பொது மக்களுக்கு டெலிவரி செய்கின்றோம். இதன் மூலம் , வாடிக்கையாளர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் உடலின் வெப்பநிலையை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துவது நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிசெய்கிறது’ என ZOMATO-வின் தலைமைச் செயலாளர் மோகித் சர்தானா தெரிவித்துள்ளார்.
இதே போல் SWIGGY நிறுவனமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு வசதிகள் SWIGGY  செயலியில் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், வெப்பநிலையை வைத்து மட்டும் கொரோனா தொற்று இல்லை என முடிவு செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here