Home செய்திகள் இந்தியா சீனாவில் பரவ தொடங்கிய புதிய வைரஸ் !

சீனாவில் பரவ தொடங்கிய புதிய வைரஸ் !

488
0
Share

உலகளவில் பரவிய கொரோனா வைரஸ் பிறப்பிடம் சீனா தான். தற்போது இந்த வைரசிற்கு உலகளவில் 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இருப்பினும் சில நாடுகள் தற்போது இந்த கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல முன்னேறியுள்ளது ஆயினும் இந்த நோய்க்கு முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் புதிதாக ஒரு வைரஸ் சீனாவில் தற்போது பரவி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பன்றிக் காய்ச்சல் என்றும் உறுதியாகியுள்ளது.
இதற்கு ஹெச்.1.என்.1 ( hen1) என்ற வைரசின் மரபணுவைக் கொண்ட இப்புதிய பன்றிக்காய்ச்சலுக்கு ஜி4 ( g4) என்று பெயரிட்டுள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து, 2018 ஆம் ஆண்டு வரை இந்த வைரஸ் குறித்து நடத்தப்பட்ட சோதனையில் G4 மனிதர்களுக்குத் தொற்று ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
இந்த பன்றிக் காய்ச்சல் ஏற்கனவே பன்றி பண்ணைகளில் பணிபுரிபவர்களில் கிட்டத்தட்ட 11% பேருக்கு இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டனர் இருப்பினும் இந்த நோயானது கொரோனா வைரஸ் போன்று மனிதரிடம் இருந்து மற்ற மனிதர்களுக்குப் பரவாது என்று தெரிவிக்கிறது சீன அரசு.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here