Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் டிக்டாக் மற்றும் ஹெலோ உள்ளிட்ட செயலிகளின் தடை… சீனாவின் பதிலடி?

டிக்டாக் மற்றும் ஹெலோ உள்ளிட்ட செயலிகளின் தடை… சீனாவின் பதிலடி?

397
0
TikTok Banned
Share

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்து வெளியிட்ட உத்தரவை எதிர்த்து சீனா அரசு அறிக்கை விட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கவுன்சிலர் ஜி ரோங் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்த நடவடிக்கை பாரபட்சமானது, உலகில் உள்ள வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சீன செயலிகளை ஜூன் 29-ம் தேதி இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அதன்  தொடர்புடைய சட்டங்கள், அவற்றின் நெறிமுறைகளைக் காட்டி தடை செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், இணக்கத்துக்கும், பாதுகாப்புக்கும், அரசு மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சீனா தீவிரமாகக் கவலை கொள்கிறது, உறுதியாக எதிர்க்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை என்றும், தெளிவில்லாத பொதுவான வாதங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கங்கள் சரியாக இல்லாதனாலும், இது உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளை மீறுவதாக இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறது.
“சர்வதேச வணிகத்தின் பொதுவான போக்குகளுக்கும், மின்னணு வணிகத்துக்கும் எதிராக இது இருக்கிறது. நுகர்வோர் நலனுக்கும், சந்தைப் போட்டிக்கும் இது எதிரானது” என்றும் சீனா தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட இந்த செயலிகளைப் பயன்படுத்துவோர் ஏராளமாக இந்தியாவில் இருப்பதாகவும், இந்தியச் சட்டங்களின் கீழும், நெறிமுறைகளுக்கு உட்பட்டுமே இச்செயலிகள் செயல்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகள் செயல்படுவதற்காக உள்நாட்டில் வேலை செய்த இந்திய ஊழியர்கள், இந்த செயலிகள் மூலம் செயல்பட்ட பல படைப்பாளிகள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியச் சீன வணிக ஒத்துழைப்பின் பலன் தரும் இயல்பை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்றும், இந்தியத் தரப்பு தமது பாரபட்ச நடைமுறைகளை மாற்றிக்கொள்ளும் என்றும் எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here