Home செய்திகள் இந்தியா நந்திதாவின் ஆக்சன் படம் திரையில் இல்லை! வருத்தத்தில் நந்திதா..

நந்திதாவின் ஆக்சன் படம் திரையில் இல்லை! வருத்தத்தில் நந்திதா..

463
0
Share

அட்டகத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்த நடிகை நந்திதா. இவர் குடும்ப பாங்கான நடிகை  என்ற இமேஜை கொண்டவர் ஆனாலும் இவருக்குப் பெரிதாக வாய்ப்புகள் தற்போது இல்லை. அதே போல் இவர் நடித்த படங்களும் வாய் விட்டு எண்ணி விடலாம்.
இவர் நடித்த படங்களில் பெரிதாக ஹிட் அடித்த படங்கள் எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி.
இதைத் தவிர வேறேதும் இவர் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. சில காலங்களாக இவருடைய படங்கள் ஏதும் வரவில்லை.
nathithaதற்போது இவர் வெயிட்டான கேரக்டரில் நடித்து வெளிவரத் தயாராக இருந்த படம் தான் IPC 376. இந்த படத்தில் இவர் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். இதுவரை பக்கத்து வீட்டுப் பெண், எதிர் வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்திலிருந்து புது மாற்றத்தைக் கொடுத்துள்ளார். அதிலும் டூப் இல்லாமல் இவரே சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
பிரபல சண்டை இயக்குநர் ராம்குமார் சுப்புராமன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
நந்திதாவும் இந்த படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருந்தார் ஆனால் தற்போது இந்த படத்தை OTT தளத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் சற்று கலக்கத்தில் நந்திதா உள்ளார். ஏனென்றால் தம் இமேஜை இந்த படம் சற்று திரையரங்கில் வெளியாகித் தூக்கி விடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் OTT தாளத்தில் வெளியாவதால் அதன் முழு கொண்டாட்டம் இருக்காது என்று வருந்துகிறார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here