Home செய்திகள் இந்தியா பிரம்மாண்ட சிலைகள் !வீணாகும் பிளாஸ்டிக், இரும்பு பொருட்களால் உருவாக்கப்பட்டது..

பிரம்மாண்ட சிலைகள் !வீணாகும் பிளாஸ்டிக், இரும்பு பொருட்களால் உருவாக்கப்பட்டது..

387
0
Share

உலகத்தில் ஏராளமான பொருட்கள் வீணாகி வருகிறது. அதனால் அதனை எரிக்கும் போது சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வீணாகும் பொருளை வைத்து உபயோகிக்கும் வகையில் தாய்லாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில், வீணாகும் பொருட்கள் மூலம் பிரபல பிரமாண்ட சிலைகள், விலங்குகளின் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

தாய்லாந்தில் 100 கி.மீ., தூரத்தில் உள்ள ஆங் தோங்க் மாகாணத்தில் ‘பன் ஹன் லெக்’ அல்லது இரும்பு ரோபோக்களின் வீடு’ என்ற அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, பழைய வாகனங்களின் உதிரிப் பாகங்கள் மூலம் சிற்பங்கள் மற்றும் சிலைகள் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும்.

 

கடந்த 5ம் தேதி முதல், இந்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது, சினிமாக்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள்  மற்றும் நாவல்களில் இடம்பெற்ற கற்பனை கதாபாத்திரங்கள் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.  கண்காட்சியில் ‘டிரான்ஸ்பார்மர்’ படத்தில் இடம்பெற்ற  கதாபாத்திரங்கள், ரோபோ போலீஸ்கள் ஏலியன்கள், டைனோசர்கள், விலங்குகள் போன்ற சிலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இது பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால் ஏராளமான வீணாகும் இரும்புகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here