Home செய்திகள் இந்தியா கொரோனாவை போற்றும் 108 துதி ! நெட்டிசன்களின் கிண்டல்..

கொரோனாவை போற்றும் 108 துதி ! நெட்டிசன்களின் கிண்டல்..

432
0
Corona Virus India
Share

கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பொருளாதார வீழ்ச்சியும், உயிரிழப்பும் ஏற்பட்டது. இந்த கொரோனா வைரசிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்பிற்குச் சீனா தான் காரணம் என்று பல்வேறு நாடுகள் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

ஆனால் நெட்டிசன்களோ இந்த கொரோனா வைரசைக் கிண்டலடித்துக் கொண்டுள்ளனர். மீம்ஸ் கிரீயேட்டர்கள் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை வைத்து ஏராளமான மீம்ஸ் இணையத்தில் பரவி ட்ரெண்ட் ஆகின. அந்த வரிசையில் தற்போது கடவுள்களுக்குத் துதி பாடல் மற்றும் போற்றி துதி ஸ்லோகங்கள் செய்வது போல் கொரோனா வைரஸ் குறித்து 108 துதி போற்றிகளை இணையத்தில் பரப்புகின்றனர். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

108 கொரோன துதி :

1. கொரோனாவே போற்றி.

2. ஊஹானில் பிறந்தாய் போற்றி.

3. உலகெங்கும் பரவினாய் போற்றி

4. உலகையே கலக்கினாய் போற்றி

5. உயிர்களைப் பறித்தாய் போற்றி .

6. வவ்வாலின் பிள்ளையே போற்றி. .

7. தொண்டையில் அமர்ந்தாய் போற்றி.

8. சுவாசத்தைக் கெடுத்தாய் போற்றி.

9. மூச்சினிலே பரவுவாய் போற்றி.

10. கரங்களில் பதிவாய் போற்றி.

11. வைரசே போற்றி.

12. வைரசின் சக்கரவர்த்தியே போற்றி.

13. மருந்தில்லா வைரசே போற்றி.

14. தொழில்களை முடக்கினாய் போற்றி.

15. சீனாவின் பரிசே போற்றி.

16. சீனாவின் மறை முக ஆயுதமே போற்றி.

17. சீனாவை உலகமே வெறுக்க வைத்தாய் போற்றி.

18. சீனப்பொருட்களைத் தடைசெய்ய வைத்தாய் போற்றி.

19. ஜின்பிங்கை ஜம்பிங் செய்யவைத்தாய் போற்றி.

20. மக்களைப் பாதித்தாய் போற்றி

21. மனம் கலங்க வைத்தாய் போற்றி

22. கைகழுவ வைத்தாய் போற்றி.

23. முகம் மூட வைத்தாய் போற்றி.

24. தள்ளியிருக்க வைத்தாய் போற்றி ..

25. தனிமையைத் தந்தாய் போற்றி .

26. தப்லிக் ஜமாத் கூட்டத்தால் பரவினாய் போற்றி

27. கோயம்பேட்டில் குடிகொண்டாய் போற்றி

28. கூட்டமாய் இருந்தால் பரவுவோய் போற்றி

29. வயதானவர்களைப் பற்றுவாய் போற்றி

30. பலகீனமானவர்களைப் பாதிப்பாய் போற்றி .
.
31. திமிர்பிடித்துத் திரிவோரைத் தாக்குவாய் போற்றி

32. தடை மீறி நடப்போரைப் பீடிப்பாய் போற்றி

33. ரயிலை மருத்துவமனை ஆகினாய் போற்றி

34. பள்ளியை மருத்துவமனை ஆகினாய் போற்றி.

35. ஊரடங்கு அறிவிக்க வைத்தாய் போற்றி

36. ஊர்விட்டு வந்தோரை ஓடவைத்தாய் போற்றி .

37. பட்டினி கிடைக்க வைத்தாய் போற்றி.

38. எதிர்க்கட்சிகளுக்கு தீனியளித்தாய் போற்றி.

39. ஆளும் கட்சிகளுக்குச் சோதனை தந்தாய் போற்றி.

40. பொருளாதாரம் சிதையச் செய்தாய் போற்றி .

41. வடிவேலு மீம்ஸில் வலம் வந்தாய் போற்றி .

42. சித்த வைத்தியத்தை உயரச் செய்தாய் போற்றி .

43. அலோபதியை அலற வைத்தாய் போற்றி

44. கபசுர குடிநீருக்குக் கட்டுப்பட்டாய் போற்றி

45. உப்பு , மிளகு தின்றால் விலகிடுவாய் போற்றி

46. குடும்பத்தினர் இணைந்திருக்க வைத்தாய் போற்றி .

47. வீட்டிலிருந்து வேலை செய்ய வைத்தாய் போற்றி

48. இல்லத்தரசிகளின் சுமை அதிகரித்தாய் போற்றி.

49. பள்ளி , கல்லூரிகளை மூடவைத்தாய் போற்றி.

50. குழந்தைகளை வீட்டிற்குள் அடையவைத்தாய் போற்றி.

51. ஆன் லைனில் கல்வியைக் கற்க வைத்தாய் போற்றி.

52. பரீட்சை எழுதாமல் பாஸாக வைத்தாய் போற்றி. .

53. அரசாங்க அலுவலர் சம்பளம் மட்டும் பேரவைத்தாய் போற்றி.

54. தனியார் அலுவலரைத் தவிக்கவைத்தாய் போற்றி.

55. ஓட்டல் உணவை மறக்கவைத்தாய் போற்றி

56. வீட்டில் ஆண்களையும் சமைக்கவைத்தாய் போற்றி .

57. அரசாங்கக் கடன்களை அதிகரிக்க வைத்தாய் போற்றி.

58. இலவசங்கள் அள்ளித்தர வைத்தாய் போற்றி.

59. வல்லரசு நாடுகளின் பல்லை பிடுங்கினாய் போற்றி.

60. அமெரிக்காவை ஆட்டிப்படைத்தாய் போற்றி.

61. இத்தாலியை இடிந்துபோக வைத்தாய் போற்றி.

62. இங்கிலாந்தை சொங்கிலாந்து ஆகினாய் போற்றி

63. ரஷ்யாவில் புகுந்து ரகளை செய்தாய் போற்றி.

64. பிரேசிலில் பிரேதங்கள் குவியவைத்தாய் போற்றி.

65. குவைத்து ஜனத்தொகை குறைய வைத்தாய் போற்றி.

66. அரபுநாடுகளையும் அரளவைத்தாய் போற்றி.

67. ஆஸ்திரேலியாவை மிரளவைத்தாய் போற்றி.

68. கிரிக்கெட் ஆட்டத்தைக் கைவிடவைத்தாய் போற்றி

69. அனைத்து விளையாட்டையும் அடக்கிவைத்தாய் போற்றி.

70. ரசிகர்களின்றி போட்டி நடக்கவைத்தாய் போற்றி.

71. பவுலர்கள் ஆச்சாரமாய் இருக்கவைத்தாய் போற்றி.

72. கட்டிப்பிடிக்கத் தடைவிதித்தாய் போற்றி.

73. இரவு விடுதிகளை மூடவைத்தாய் போற்றி.

74. சினிமாத்தியேட்டர்களை மூடவைத்தாய் போற்றி.

75. சீரியல்களில் இருந்து காப்பாற்றினாய் போற்றி.

76. காற்றில் மாசு குறைத்தாய் போற்றி.

77. நீரில் கழிவுகள் கலப்பதைத் தவிர்த்தாய் போற்றி.

78. மருத்துவர்களின் மகத்துவம் அறியவைத்தாய் போற்றி.

79. செவிலியர்களின் சேவை புரியவைத்தாய் போற்றி.

80. துப்புரவுத் தொழிலாளர்களை மதிக்க வைத்தாய் போற்றி.

81. சானிடைசர் உபயோகிக்க வைத்தாய் போற்றி.

82. சானிடைசர் தயாரிப்பாளரை மகிழ வைத்தாய் போட்டி.

83. முகக்கவசம் தயாரிப்போர்க்கு ஊக்கம் தந்தாய் போற்றி.

84. கவச ஆடை தயாரிப்போர்க்கு வாழ்வளித்தாய் போற்றி.

85. மருந்துகள் ஏற்றுமதி செய்ய வைத்தாய் போற்றி

86. பாரதத்தின் பெருமை உயர்த்தினாய் போற்றி.

87. ஆலயங்களை மூட வைத்தாய் போற்றி.

88. வீட்டையே ஆலயமாய் ஆக்கிவைத்தாய் போற்றி.

89. ஜாதி, மத வேறுபாடின்றி தாக்கினாய் போற்றி.

90. திருமணக்கொண்டாட்டங்கள் தவிர்க்க வைத்தாய் போற்றி.

91. சிக்கனமாய் வாழ வைத்தாய் போற்றி.

92. சலவை செலவைக் குறைத்தாய் போற்றி.

93. முடிவெட்டும் செலவைத் தவிர்க்க வைத்தாய் போற்றி.

94. ப்யூட்டி பார்லர்களை மூடினாய் போற்றி.

95. இயற்கை அழகோடு இருக்கவைத்தாய் போற்றி.

96. பெட்ரோல் செலவைக் குறைத்தாய் போற்றி.

97. மளிகை செலவைக் கூட்டினாய் போற்றி.

98. உலகே உனக்கு அஞ்ச வைத்தாய் போற்றி.

99. இந்தியாவை விட்டு விலகுவாய் போற்றி

100. சீனாவுக்கே திரும்பச் செல்வாய் போற்றி

100. வீணாப்போனவங்களை வதைப்பாய் போற்றி .

101. சுத்தம் ,சுகாதாரம் பேணுவோம் போற்றி

102. வணக்கம் சொல்லி வரவேற்போம் போற்றி.

103. முகக்கவசம் என்றும் அணிவோம் போற்றி.

104. சமூக இடைவெளி கடைப்பிடிப்போம் போற்றி.

105. பார்களுக்குச் செல்வத்தைத் தவிர்ப்போம் போற்றி.

106. இனியும் எங்களை வதைக்காதே போற்றி.

107. இயல்புநிலை திரும்ப விடுவாய் போற்றி.

108 . போனால் உன்னைப் போற்றுவோம் போற்றிப்போற்றி .

நுண்ணுயிரியாய் வந்து நுழைந்து பலரின் இன்னுயிரைப்பறித்த இதயமற்ற கொரோனாவே மண்ணுலகிலிருந்து நீ மறையும் நன்னாளே பொன்னாளாகும் உலகுக்கு


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here