Home செய்திகள் இந்தியா பீரங்கிகளை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த நாக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றி…

பீரங்கிகளை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த நாக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றி…

452
0
Share

பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய நாக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை போக்ரானில் இன்று வெற்றிகரமாக நிறைவேறியது..

அதிவேக 5G இன்டர்நெட் ரிலையன்ஸ் JIO முடிவு!

நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி உள்ளது. இதில் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நாக் ஏவுகணையும் அடங்கும். எதிரிகளின் பீரங்கிகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று இறுதிக்கட்ட சோதனை நடைபெற்றது. இன்று காலை 6.45 மணியளவில் ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான போக்ரானில் நாக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்தது. சோதனை வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, ஏவுகணை விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும்.

இது இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது..


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here