Home செய்திகள் இந்தியா விமான சத்தத்தால் அதிர்ந்த நகரம்…

விமான சத்தத்தால் அதிர்ந்த நகரம்…

353
0
Share

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரத்தில் அதி பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அது மட்டுமில்லாமல் வீடுகள் அதிர்ந்ததாக கூறினர். இது அதிநவீன போர் விமானத்தால் ஏற்பட்ட சத்தம் என்று அந்நகர போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

ஓரிரு வினாடிகள் நீடித்த இந்த பயங்கர சத்தம் காரணமாக பாரீஸ் நகரம் முழுவதும் மக்கள் குண்டு வெடித்து விட்டதோ என்று அஞ்சினர். இதனால் வீடுகள் விட்டு அஞ்சி வெளியில் வந்தனர். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒரு சில வினாடிகள் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்திருந்தனர் அதன் பிறகுதான் பொதுமக்க நிம்மதி அடைந்தனர்.

போலீசார் குறிப்பிட்ட ட்விட்டர் பதிவு :
பாரீஸ் நகரம் முழுவதும் குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது. ஆனால் அது போல ஏதும் நிகழவில்லை. இது அதிநவீன போர் விமானங்கள் மூலம் ஏற்பட்ட சத்தம் யாரும் அச்சப்படத் தேவையில்லை. நகரம் முழுவதும் இந்த சத்தம் கேட்டதாக தெரிவித்தனர் எனவே யாரும் பயப்பட வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தது.

சீசா ஆடும் பங்குச்சந்தை.. இவ்வளவு வீழ்ச்சியா !
ஒரு சில பகுதிகளில் இந்த சத்தம் காரணமாக வீடுகள் அதிர்ந்ததாகவும் கூறுகின்றனர். இந்த சத்தத்தை பாரிசில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேட்டதாக ஒரு சில மக்கள் தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here