Home அறிவியல் இந்தியாவுடன் கைகோர்க்கும் பிரான்ஸ் ! வெள்ளி கிரகத்திற்கு விண்கலம்…

இந்தியாவுடன் கைகோர்க்கும் பிரான்ஸ் ! வெள்ளி கிரகத்திற்கு விண்கலம்…

356
0
Missile America
Share

வீனஸ் என்று அழைக்கப்படும் வெள்ளி கிரகத்துக்கு இந்தியாவில் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக விளங்கும் இஸ்ரோ விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல ஆராய்ச்சி நிறுவனமான சி.என்.இ.எஸ் என்ற நிறுவனம் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது :

வீனஸ் என்ற கோளுக்கு இந்தியா 2025 இல் விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதற்காக ஏராளமான கருவிகளைத் தயாரிக்கும் பணியில் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான ராஸ்காஸ்மோஸ் என்ற நிறுவனத்துடன் இணைய திட்டமிட்டுள்ளது. தற்போது பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான சி.என்.ஆர்.எஸ் என்ற நிறுவனத்துடனும் இனைய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவருடன் சிவனுடன் சி.என்.இ.எஸ். தலைவர் ஜீனா யீவ்ஸ் லீ கால் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு வீனஸ் கோள் குறித்து இந்தியா மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் பிரான்சில் ஈடுபட மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், முதல் முறையாக பிரான்ஸ் நாட்டின் விண்கலம் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here