Home செய்திகள் இந்தியா சீசா ஆடும் பங்குச்சந்தை.. இவ்வளவு வீழ்ச்சியா !

சீசா ஆடும் பங்குச்சந்தை.. இவ்வளவு வீழ்ச்சியா !

373
0
Share

கடந்த வாரத்தில் 600 புள்ளிகளை இழந்த தேசிய பங்குச்சந்தை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே உயர்வை சந்தித்து வந்தது. ஆயினும் ஒரு நிலையான பிடிப்பில்லாமல் மேலும் கீழுமாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

வாரத்தின் முதல் நாள் 200 புள்ளிகள் உயர்ந்த தேசிய பங்குச்சந்தையான நிப்டி, நேற்று தொடக்கத்தின் உயர்ந்தும் முடிவில் 100 புள்ளிகள் வரை இறக்கமுமாக முடிந்தது. அதேபோல் இன்றும் ஏற்ற இறக்கத்துடன் பங்குச் சந்தை முடிந்தது.

இன்றைய தொடக்கத்திலேயே சென்செக்ஸ் குறியீட்டு எண் 49 புள்ளிகள் 37,924.21ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.45 புள்ளிகள் சரிந்து 11,220.95ஆகவும் வர்த்தகமான நிலையில், தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கியது. பங்குச்சந்தை சிறிது நேரத்திலேயே 100 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால் மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இறுதியில் மீண்டும் உயர்வை சந்தித்தது. இவ்வாறு நிலையற்று ஏற்றத்தாழ்வுடன் இன்றைய பங்குச்சந்தை முடிவுற்றது.

இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது – பொருளாதார நிபுணர் அபிஜித்..

இது தொடர்பாக வர்த்தகச் சந்தை வல்லுனர்கள் கூறியிருப்பது: ஆசிய பங்குச் சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கமே இந்திய பங்குச் சந்தையிலும் பிரதிபலிக்கிறது. முதலீட்டாளர்கள் லாப நோக்கோடு செயல்படுகின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய முடிவில் சென்செக்ஸ் மும்பை பங்குச்சந்தை 94 புள்ளிகள் உயர்ந்து 38067.93 என்றும் தேசிய பங்கு சந்தை நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 11247.55 என்றும் முடிந்தது….


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here