Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் அடிக்கடி உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால் கிடைக்கும் பயன்கள்!..

அடிக்கடி உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால் கிடைக்கும் பயன்கள்!..

1036
0
Share

பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பாகற்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும்.

பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.

பாகற்காயில் பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இருக்கிறது. இது நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். அதே போல வாழைப்பழத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்குப் பொட்டாசியம் அத்தியாவசியமாகும்.

புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் பாகற்காயில் உண்டு. இந்த பீட்டா கரோட்டின்தான், நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது. இது நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது.

மேலும் பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here