Home ஆன்மீகம் இன்று சனி பிரதோஷம் ! அபிஷேக பொருட்கள் வழங்குவதால் ஏற்படும் நற்பலன்கள்..

இன்று சனி பிரதோஷம் ! அபிஷேக பொருட்கள் வழங்குவதால் ஏற்படும் நற்பலன்கள்..

986
0
Share

சனிப்பிரதோஷ நாளன்று நாம் சிவாலயங்கள் சென்று வழிபட்டால் 5 ஆண்டுகள் சிவாலயம் சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம். இந்த பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, சிவப்பரிசி,நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

அன்றைய நாள் முழுவதும் வெறும் நீராகாரம் மட்டும் உண்டு பிரதோஷ காலத்தில் சிவாலயத்திற்குச் சென்று பூஜையைக் கண்ட பிறகு நான் உண்டால் தெய்வ கடாட்சம் கிட்டும்.

ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீர் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை நடக்கும்.

இவ்வாறு நடக்கும் போது சிவபெருமானின் வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வர். அதன் பின்பு அருகம்புல் சாற்றி இறுதியாக வில்வத்தால் அர்ச்சனை செய்து முடிப்பர்.

இதில் ஏதாவது ஒன்றை அல்லது மொத்தத்தையும் நாம் அபிஷேகத்திற்காக வழங்கலாம் பின்பு சிவபெருமானுக்குத் தீபாராதனை நடைபெறும். இந்த தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு நடுவே பார்த்து வழிபட்டால் தங்கள் அனைத்து தோஷமும் விலகி நன்மை உண்டாகும்.

இந்த ஒவ்வொரு அபிஷேக பொருட்களின் அற்புத பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
பால் – நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள் கிட்டும்.
தயிர் – அனைத்து வளமும் உண்டாகும்.
தேன் – இனிய சாரீரம் கிட்டும்.
பழங்கள் – வாழ்வு செல்வம் பெருகும்.
பஞ்சாமிர்தம் – செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
நெய் – முக்தி பேறு கிட்டும்.
இளநீர் – நல்ல சுற்றுப்புறம் கிட்டும்.
சர்க்கரை – எதிரிகள் மறைவர்.
எண்ணெய் – நல்வாழ்வு கிட்டும்.
சந்தனம் – சிறந்த சக்திகள் கிட்டும்.
மலர்கள் – தெய்வ தரிசனம் கிடைக்கும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here