Home செய்திகள் இந்தியா தளபதி 65 மாஸ் அப்டேட் ! உறுதியான இசையமைப்பாளர்…

தளபதி 65 மாஸ் அப்டேட் ! உறுதியான இசையமைப்பாளர்…

712
0
Vijay 65
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வளரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படம் கடந்த மாதம் வெளிவரத் திட்டமிடப்பட்டது.
Vijayஆனால் கொரோனா பரவுதலைக் குறைக்க நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் திரைக்கு வரவில்லை. வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தளத்தில் பல சாதனை படைத்துள்ளது. பட்டிதொட்டி எங்கும் இப்பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
எப்போதுமே தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கும் இவர் யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் யார் இவர் படத்திற்கு இசையமைக்கிறார் என்ற தகவல் குறித்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
S.S.Tamanஅவ்வகையில் தளபதி 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் என்று அரசல் புரசலாகத்  தகவல் கசிந்துள்ளது.மேலும் தளபதி 65 துப்பாக்கி 2 -வாக இருக்கும் என்றும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் S.S தமன் பணியாற்றவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் S.S.தமன் சில தினங்களுக்கு முன் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில்  நேரடி பேட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகர் விஜய்யின் திரைப்படத்தில் இணைவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அக்கேள்விக்குப் பதிலளித்த இசையமைப்பாளர் S.S தமன் தளபதி விஜய்யின் திரைப்படத்தில் இசையமைக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என்றும். கடந்த மூன்று வருடங்களாக அவரின்  திரைப்படத்தில் பணியாற்றப் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும். ஆனால் தற்போது தான் வாய்ப்பு கிடைத்துள்ளது” எனவும்  கூறியுள்ளார்.
எனவே தளபதி 65 -யில் தமன் உறுதி ஆகியிருப்பது தெளிவாகியுள்ளது. இயக்குநருடன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here