Home செய்திகள் இந்தியா இந்தியா முழுவதும் மாஸ்டர் படம் வெளியாகிறது இத்தனை மொழிகளிலா ஆச்சரியத்தில் கோலிவுட் ? 

இந்தியா முழுவதும் மாஸ்டர் படம் வெளியாகிறது இத்தனை மொழிகளிலா ஆச்சரியத்தில் கோலிவுட் ? 

1129
0
Master movie
Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும்  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஏப்ரல் 9-ந் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாஸ்டர் படத்தை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.master
எத்தனை மொழிகளில் வெளியாகிறது தெரியுமா ?
மாஸ்டர் படம் குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீசாக உள்ளது எனப் பிரபல திரையரங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
விஜய் எத்தனையோ பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்திருந்தாலும், அவரது எந்த படங்களும் பான் இந்தியா படமாக வெளியாகவில்லை. அந்தக்குறையை மாஸ்டர் படம் தீர்த்துள்ளது என்றே சொல்லலாம். விஜய் படம் ஒன்று பான் இந்தியா படமாக வெளியாவது இதுவே முதன்முறை.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here