Home முகப்பு உலக செய்திகள் மிதக்கும் தியேட்டர் ! சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க புதிய யுக்தி..

மிதக்கும் தியேட்டர் ! சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க புதிய யுக்தி..

450
0
Share

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏராளமான நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில் ஒன்று தான் இந்த சமூக இடைவெளி. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏராளமான வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ் வழியாகவும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

தற்போது இஸ்ரேலின் இரண்டாவது பெரிய நகரமான டெல் ஆவிவ்வின் நகர நிர்வாகம் மிதக்கும் தியேட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

ஏனென்றால் சினிமா ரசிகர்கள் கொரோனா பரவல் காலத்தில் எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் உள்ளனர் இதனைத் திருப்திப்படுத்தும் வகையில் இஸ்ரேல் இந்த முடிவை மேற்கொண்டு உள்ளதாம். எப்படி என்றால் நகரத்தில் உள்ள ஏரிகளில் மிதக்கும் தியேட்டராக மாற்றி வருகின்றனர்.

அரியர் தேர்வை ரத்து செய்வதா ? வல்லுநர்கள் எச்சரிக்கை !

வணிக வளாகங்கள் நவீன திரையரங்குகள் போன்ற அனைத்து இடங்களும் கொரோனா பரவல் காரணமாக தற்போது மூடி உள்ளது. மேலும் வருமானங்கள் இல்லாமல் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையிலும் இந்த மிதக்கும் தியேட்டர் முயற்சியை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு உதாரணமாக தற்போது யார் கோன் பார்க் ஏரியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 2 மீட்டர் இடைவெளி கொண்டு 70 படகுகளை துடுப்புடன் அமைத்துள்ளனர். அதில் அமர்ந்தவாறு திரைப்படங்களைப் பார்த்து இரசிக்க வழிவகை செய்துள்ளனர்.

மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டுமே திரையிடப்படும் என்று அந்த நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here