Home கட்டுரை மே 7 முதல் டாஸ்மாக் ! தமிழக அரசு அறிவிப்பு ..

மே 7 முதல் டாஸ்மாக் ! தமிழக அரசு அறிவிப்பு ..

408
0
Tamilnadu
Share

மே 7-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட மே 17 வரை டாஸ்மாக் செயல்படாது என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
இருப்பினும் கொரோனா பாதித்த இடங்களை  கட்டுப்பாட்டிற்குள் உள்ள Containment Zone களில் டாஸ்மாக் இயங்காது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது :
Tasmacதமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் அண்டை மாநில மதுக்கடைகளுக்கு செல்வதால், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மே 7 முதல் மதுக்கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மேலும்  கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது. திறக்கும் மதுக்கடைகளுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
1. மதுபான கடைகளில் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டும்.
2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் இடையே குறைந்தது ஆறு அடி தூரமாவது  இடைவெளி இருத்தல்  வேண்டும்.
3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
4. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.
5. அனைத்து மதுபான கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்.
6. தேவைக்கேற்ப கூடுதல் நபர்கள் பணியமர்த்தி கூட்டம் கூடுவதை தவிர்க்கபடும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மதுக்கடை திறப்பது குவாட்டர் வாங்க வந்தேன் நான் கொரோனா வாங்கி போனேன் என்ற நிலைக்கு தள்ள அதிக வாய்ப்புள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here