Home செய்திகள் இந்தியா செப்டம்பரில் கொரோனாவிற்கு மருந்து !அசத்தும் இந்திய நிறுவனம்..

செப்டம்பரில் கொரோனாவிற்கு மருந்து !அசத்தும் இந்திய நிறுவனம்..

632
0
Share

சீன நாட்டின் வுஹான் மாகாணத்திலிருந்து உலகம் முழுவதும் படர்ந்த கொடிய வைரஸ் கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த வைரஸினால் இதுவரை 34 லட்சம் பேர்  பாதிக்கப்படும் 2.4 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த வைரஸிற்கு உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கப் போராடுகின்றனர். மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கூறுகின்றனர்.
corona vaccine
இந்நிலையில் இந்தியாவில் புனேவை தலைமையாகக் கொண்டு செயல்படும் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் தடுப்பூசி கிடைத்து விடும். இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.இது பற்றிப் பேசிய செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா CEO எங்கள் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருப்பதாகவும்.
அமெரிக்காவில் உள்ள கோடஜெனிக்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்துடன் ஆய்வு செய்வதாகவும் கூறினார்.
மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த தடுப்பூசி சோதனையை 7 பேரிடம் சோதனை முயற்சியாகச் செலுத்தியுள்ளது.
vaccine coronaஇதில் பிரிட்டன், அமெரிக்கா, சீனா ,இந்தியா போன்ற நாட்டினர்களுக்கு இச்சோதனை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இன்னும் 4 மாதத்திற்குள் (செப்டம்பர்) தடுப்பூசி கண்டறியும் முயற்சி சோதனையில் வெற்றி கிடைத்துவிடும். விலை தற்போது சரியாகக் கூற இயலாது. ஆனால் தோராயமாக 1000 ரூபாய் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here