Home செய்திகள் இந்தியா நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும் ! மத்திய அரசு..

நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும் ! மத்திய அரசு..

423
0
Share

MBBS, BDS  உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-21- கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் பயில நீட் தேர்வு மே 3-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக மாதம்    20-ம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், உயர் கல்விநிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நீட் தேர்வு, JEE தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மார்ச் 28ம் தேதி அறிவித்தது.Human development
இந்த நீட் தேர்விற்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்துள்ளனர், அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். நீட் தேர்வு எப்போது நடைபெறும் எனத் தெரியாமல் அரசின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங், JEE  மெயின் மற்றும் நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளார்.
அதில்  நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூலை 26ம் தேதி நடைபெறும். IIT , IIM  உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான JEE மெயின் தேர்வுகள் வரும் ஜூலை 19ம் முதல் ஜூலை 23க்குள் நடைபெறும் என்றும், இதற்கிடையே JEE அட்வான்ஸ் தேர்வுகள் ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
நீட் தேர்வுகள், பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது கூடிய விரைவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செப்டம்பரில் நாடு முழுவதும் கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here