Home செய்திகள் இந்தியா நீட் தேர்வால் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு!…

நீட் தேர்வால் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு!…

783
0
Neet Exam
Share

மதுரை நீட் தேர்வில் அதிக தேர்ச்சியால் ஆல் இந்தியா ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிக இடங்களை கைப்பற்றுவர் என சேலம் டைம்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனர் பெரியசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

2019 நீட் தேர்வில் தமிழக மாணவர் தேர்ச்சி 47 சதவீதம். ஆனால் 2020 தேர்வில் 56 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தேசிய தேர்ச்சியை (56 சதவீதம்) விட அதிகம். ஒரே ஆண்டில் 9 சதவீதம் தேர்ச்சி அதிகரித்த மாநிலம் தமிழகம் தான். மதிப்பெண் பட்டியலில் முதல் 10 இடங்களிலும் தமிழக மாணவர்கள் இடம் பெற்றனர். இதன் மூலம் எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றில் ஆல் இந்தியா ஒதுக்கீட்டில் 2 ஆயிரம் இடங்களை தமிழக மாணவர் பிடிக்க முடியும். இதன் மூலம் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இது பெரிய சாதனை.

இதற்கு முக்கிய காரணம் தற்போதைய தமிழக பாடத் திட்டம். நீட் தேர்வில் 175 வினாக்கள் அதில் இருந்து இடம் பெற்றுள்ளன. தமிழக அரசு பாராட்டுக்குரியது. பாடத் திட்டம் நன்றாக இருந்தும் தனியார் கோச்சிங் சென்டர்களில் படித்து தான் அதிக மதிப்பெண் எடுக்கின்றனர் என்றால் அந்த பாடத்திட்டத்தை கற்பிக்கும் முறையில் தான் தவறு உள்ளதாக தெரிகிறது.

தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதிப்பட்டியலில் தமிழ் மொழி சேர்ப்பு!…

பயிற்சி இல்லாமல் எதிலும் வெற்றி பெற முடியாது.தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ. 28 ஆயிரம் கோடி கல்விக்கு ஒதுக்குகிறது. இதில் பள்ளிக் கல்விக்கு 70 சதவீதம், அதாவது ரூ.18 கோடி ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் 10 லட்சம் மாணவர்கள் என்றாலும் ஒருவருக்கு ரூ.1.05 லட்சம் அரசு செலவிடுகிறது.

மாநில தேர்வில் 99 மதிப்பெண் பெறும் மாணவரால் நீட் போன்ற தேர்வில் 10 சதவீதம் மதிப்பெண் கூட எடுக்க முடியவில்லை என்றால் எந்த இடத்தில் தவறு நடக்கிறது என அரசு கண்டறிய வேண்டும். தேர்வு முறையில் மாற்றம் இல்லாதது, ஆந்திரா போல் என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தை முழு அளவில் பின்பற்றாததே காரணம். இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here