Home செய்திகள் இந்தியா ஜியோபேஜஸ் வெப் பிரவுசர் ஆப் அறிமுகம் !

ஜியோபேஜஸ் வெப் பிரவுசர் ஆப் அறிமுகம் !

937
0
Share

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் கூடிய ஜியோபேஜஸ் வெப் பிரவுசர் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபேஜஸ் என்ற பெயரில் புதிய வெப் பிரவுசர் ஆப் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோபேஜஸ் குரோமியம் ப்ளின்க் சார்ந்த பிரவுசர் ஆகும். இந்த பிரவுசரில் என்க்ரிப்ட்டெட் கனெக்ஷன் வசதி மற்றும் எட்டு இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

ஜியோபேஜஸ் பிரவுசர் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. கூகுள் பிளே லிஸ்டிங்கில் புதிய வெப் பிரவுசர் இந்திய மொழிகளில் உள்ளூர் செய்திகள், ஸ்மார்ட் டவுன்லோட் மேனேஜர், இன்காக்னிட்டோ பிரவுசிங் மற்றும் தீம் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதிரடி சலுகையில் கோடிகளை அள்ளும் ஆன்லைன் வியாபாரம்…

மேலும் இதில் பின்-லாக் வசதியுடன் இன்காக்னிட்டோ மோட், பில்ட் இன் ஆட் பிளாக் பிளஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் இந்தி, மராத்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் இயக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

குரோமியம் சார்ந்த பிரவுசர் என்பதால் இந்த வெப் பிரௌசர் வேகமாக இருப்பதுடன் பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஜியோ தெரிவித்து உள்ளது. இதில் இணையப்பக்கங்கள் வேகமாக ரென்டர் ஆவதால், வேகமான பிரவுசிங் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here