Home செய்திகள் இந்தியா பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு மாரடைப்பு !

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு மாரடைப்பு !

645
0
Share

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். இவர் பல ஆண்டுகளாக இந்தியாவின் கனவாக இருந்த உலககோப்பையை, 1983ல் இவரது கேப்டன்சியில் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். மேலும் 1983ல் இந்திய அணி வென்றது குறித்து “1983” என்ற பெயரிலேயே தயாராகி வரும் படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவ் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் குறித்து பேசி வந்த கபில்தேவ் தற்போது திடீரென மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here