Home முகப்பு உலக செய்திகள் நாளை முதல் சிறப்பு விமானங்கள் இந்தியா – UAE இடையே இயக்க அனுமதி!…

நாளை முதல் சிறப்பு விமானங்கள் இந்தியா – UAE இடையே இயக்க அனுமதி!…

352
0
Special Flights India to UAE
Share

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் முதல் சர்வதேச போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதோடு மக்களில் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இதனால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் பயணிகள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

இந்த கொரோனா காலத்தில் இரு நாட்டுப் பயணிகளும் தாயகம் திரும்ப ஏதுவாக இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நாளை முதம் வரும் 26ம் தேதி வரை சிறப்பு விமானங்களை இயக்க Etihad Airways நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி பெங்களூரு, சென்னை, கொச்சி, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து அபுதாபிக்கு சேவைகளை இயக்கப்போவதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் பயணிக்க தகுதியான காரணம் உள்ள ஐக்கிய அரபு பயணிகள் மற்றும் இந்தியர்கள் மட்டுமே இந்த சிறப்பு விமானத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து பயணிகளும் பயணம் செய்வதற்கு முன்பு அபுதாபி அரசாங்கத்திடம் ஐசிஏ ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும், தேவையான ஒப்புதல்கள் இல்லாமல் செக்-இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here